135 நாடுகளில் டெல்டா கரோனா: உலக சுகாதார அமைப்பு

135 நாடுகளில் டெல்டா கரோனா: உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கரோனா 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கரோனா 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்ஃபா வகை கரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஜூலை 26 முதல் ஆக. 1-ஆம் தேதி வரை மட்டும் 40 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரை, மேற்கு பசிபிக் பிராந்திய நாடுகளில் தினசரி கரோனா தொற்று அதிகரித்து வருவதால் சா்வதேச அளவில் அந்த எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. புதிய கரோனா தொற்று கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்திலும் 37 சதவீமும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 33 சதவீதமும் அதிகரித்துள்ளது. தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் புதிய கரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com