உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள்

தற்காலிகமாக கரோனா பூஸ்டர் டோசுகளை போடுவதை நிறுத்துமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் அதனை நிராகரித்துள்ளன.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பு

தற்காலிகமாக கரோனா பூஸ்டர் டோசுகளை போடுவதை நிறுத்துமாறு வளர்ச்சி அடைந்த நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகள் அதனை நிராகரித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இருப்பினும், பின் தங்கிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவிவருகிறது.

தடுப்பூசி பற்றாக்குறையை தீர்க்க உலக சுகாதார அமைப்பு பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. பல நாடுகளுக்கு தடுப்பூசியே கிடைக்காத நிலையில், மக்களுக்கு பூஸ்டர் டோசுகளை (மூன்றாம் தவணை) செலுத்த ஐரோப்பிய நாடுகள் மும்முரம் காட்டிவருகிறது.

எனவே, உலகம் முழுவதும் மக்கள் போதுமான அளவில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வரை பூஸ்டர் டோசுகளை அளிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்தது. 

ஆனால், உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் நிராகரித்துள்ளன. டெல்டா வகை கரோனாவின் தீவிர தன்மையிலிருந்து தங்களின் குடிமக்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், "மூன்றாம் கரோனா தவணை அவசியமானது. மற்றவர்களுக்கு இல்லையெனிலும் மூத்த குடிமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு அதிகமான சாத்தியகூறுகள் உள்ளவர்களுக்கும் மூன்றாவது கரோனா டோஸ் அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மருத்துவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு செப்டம்பர் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com