ஆப்கானிஸ்தானில் மூன்று மாவட்டங்களைக் கைப்பற்றிய தலிபான் எதிர்ப்பு படை

வட ஆப்கானிஸ்தானில் மூன்று மாவட்டங்களை கைபற்றியுள்ளதாக தலிபான் எதிர்ப்பு படை தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வட ஆப்கானிஸ்தானில் மூன்று மாவட்டங்களை கைபற்றியுள்ளதாக தலிபான் எதிர்ப்பு படை தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டி வரும் நிலையில், பஞ்சஷேர் பள்ளத்தாக்கு பகுதி அருகே உள்ள மூன்று மாவட்டங்களை கைப்பற்றியுள்ளதாக தலிபான் எதிர்ப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

தலிபான்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிஸ்மில்லா முகமது, "பஞ்சஷேர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வடக்கே அமைந்துள்ள பாக்லான் மாகாணத்தில் உள்ள தே சலே, பானோ மற்றும் பால்-ஹிசார் மாவட்டங்களை கைப்பற்றியுள்ளோம்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஒரே வாரத்தில் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள் அனைத்தையும் தலிபான்கள் கைபற்றியதை தொடர்ந்து, பல இடங்களில்
பல்வேறு குழுக்கள் அவர்களுக்கு எதிராக இயங்கிவருகின்றன. ஆனால், வட ஆப்கானிஸ்தானில் உள்ள மூன்று மாவட்டங்களை கைப்பற்றிய குழுக்களின் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பாக்லானில் உள்ள பானோ மாவட்டம் உள்ளூர் ராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என காவல்துறை படைத்தலைவர் கூறியுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டது. ஆனால், மோதலின்போது பலத்த உயிர் சேதம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தலிபான்கள் தரப்பிலிருந்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. பஞ்சஷேரிலிருந்து தலிபான்களை விரட்டியடிப்போம் என முன்னாள் அதிபர் அம்ருல்லா சாலே, சோவியத் எதிர்ப்பு முஜாஹிதீன் தளபதி அகமது ஷா மசூத் ஆகியோர் உறுதிபட தெரிவித்துள்ளனர். ஆப்கன் அரசு படைகள், மற்ற தீவிரவாதக் குழுக்களை சேர்ந்த 6,000 போராளிகள் இந்த பள்ளத்தாக்கில் பகுதியில் கூடியுள்ளனர. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com