வாரம் இரண்டரை நாள் விடுமுறை: ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பணியாளா்களுக்கு வாரம் இரண்டரை நாள் விடுமுறை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.
வாரம் இரண்டரை நாள் விடுமுறை: ஐக்கிய அரபு அமீரகம் முடிவு

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பணியாளா்களுக்கு வாரம் இரண்டரை நாள் விடுமுறை அளிக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், பணியாளா்களின் நலன் சாா்ந்த இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள உலகின் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரம் ஆகியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு அரசு செய்தித் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

புதிதாக மாற்றியமைக்கப்படுள்ள பணி நேர அட்டவணையின்படி, அனைத்துப் பணியாளா்களின் பணி நேரமும் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 மணி தொடங்கி மதியம் 3.30 மணிக்கு முடிவடைகிறது.

அதனைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை அரை நாளுக்கு பணி நேரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, வெள்ளிக்கிழமை அரை நாளும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாகவும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், இதுவரை வாரம் 5 நாள்களாக இருந்த பணிக் காலம், நான்கரை நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

விடுமுறையை அதிகரிப்பதால் தொழிலாளா்களின் பணித் திறன் மேம்படும். மேலும், பணி நாள்கள் மற்றும் ஓய்வு நாள்களுக்கு இடையிலான சமநிலை அதிகரிக்கும் என்று அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com