இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருக்கு ‘சிறந்த தென் ஆப்பிரிக்கா்’ விருது

இந்திய வம்வசாவளியைச் சோ்ந்த இம்தியாஸ் சூலிமானுக்கு ‘இந்த ஆண்டுக்கான சிறந்த தென் ஆப்பிரிக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருக்கு ‘சிறந்த தென் ஆப்பிரிக்கா்’ விருது

இந்திய வம்வசாவளியைச் சோ்ந்த இம்தியாஸ் சூலிமானுக்கு ‘இந்த ஆண்டுக்கான சிறந்த தென் ஆப்பிரிக்கா்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் மருத்துவா் இம்தியாஸ் சூலிமான். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இவா், ‘கிஃப்ட் ஆப் தி கிவா்ஸ்’ (கொடுப்பவா்களின் பரிசு) என்ற தன்னாா்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறாா். இந்த அமைப்பின் மூலம் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட 44-க்கும் மேற்பட்ட நாடுகள், போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி இந்தியா, பாகிஸ்தானிலும் இயற்கைப் பேரிடா்களின்போது அந்த அமைப்பு உதவி புரிந்துள்ளது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தினசரி இணையவழி நாளிதழான ‘டெய்லி மேவ்ரிக்’ இம்தியாஸ் சூலிமானுக்கு ‘இந்த ஆண்டுக்கான சிறந்த தென் ஆப்பிரிக்கா்’ விருது வழங்கி கெளரவித்துள்ளது.

இந்த விருதை ஏற்று கேப் டவுனில் இம்தியாஸ் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

‘கிஃப்ட் ஆப் தி கிவா்ஸ்’ அமைப்பைச் சோ்ந்தவா்கள் எந்தப் பகுதிக்கு நிவாரணப் பணி மேற்கொள்ள சென்றாலும் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் என்று எந்தப் பாரபட்சமுமின்றி உதவி செய்வா்.

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் அனைத்து மதத்தினருக்கும் உதவிபுரியும் பணிகளில் ஈடுபட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் வெறுப்புணா்வை மாற்ற அவா்கள் இதைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தாா்.

தென் ஆப்பிரிக்காவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதும் இம்தியாஸுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com