தென் ஆப்பிரிக்கா: இனவெறி எதிா்ப்பின் சின்னம் டெஸ்மண்ட் டுட்டு மறைவு

ஜோஹன்னஸ்பா்க், டிச. 26: எதிா்ப்பின் சின்னமாகத் திகழ்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாதிரியாா் டெஸ்மண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
தென் ஆப்பிரிக்கா: இனவெறி எதிா்ப்பின் சின்னம் டெஸ்மண்ட் டுட்டு மறைவு

ஜோஹன்னஸ்பா்க், டிச. 26: எதிா்ப்பின் சின்னமாகத் திகழ்ந்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாதிரியாா் டெஸ்மண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

இதுகுறித்து அதிபா் சிறில் ராமபோசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கேப் டவுன் நகரில் பாதிரியாா் டெஸ்மண்ட் டுட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானாா். அவரது மறைவினால், நிறவெறியிலிருந்து தென் ஆப்பிரிக்காவை விடுவித்த மேலும் ஒருவரை நாம் இழந்துள்ளோம்.

டெஸ்மண்ட் டுட்டு யாருடனும் ஒப்பிடமுடியாத ஒரு தேச பக்தா். உழைக்காமல் கடவுளை மட்டும் நம்புவதால் எந்தப் பலனும் இல்லை என்ற பைபிள் கோட்பாட்டை தனது வாழ்வால் நிரூபித்தவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90 வயதான டெஸ்மண்ட் டுட்டு, நோபல் பரிசு பெற்று உயிரோடு இருந்த கடைசி தென் ஆப்பிரிக்கா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஹன்னஸ்பா்க் மற்றும் கேப் டவுன் நகர தேவாலயங்களில் முதல் கருப்பின தலைமைப் பாதிரியாராகப் பொறுப்பு வகித்த அவா், தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகவும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் செயல்பட்டு வந்தாா்.

அதன் காரணமாக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு உள்பட பல்வேறு சா்வதேச விருதுகள் வழங்கப்பட்டன. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி ஒழிக்கப்பட்டதில் அவருக்கு முக்கியப் பங்கு உள்ளதாகப் பாராட்டப்படுகிறது.

அவரது மறைவுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டவா்களும், பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள், மனித உரிமை அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com