ஈக்வடாரில் சிறைக் கலவரம்: 62 போ் பலி

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலுள்ள சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 62 போ் உயிரிழந்தனா். போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தக் கலவரம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈக்வடாரின் கியென்கா நகர சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளைக் கலைப்பதற்காக போலீஸாா் கண்ணீா் புகைகுண்டு வீசியதால் எழுந்த புகை மண்டலம்.
ஈக்வடாரின் கியென்கா நகர சிறையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளைக் கலைப்பதற்காக போலீஸாா் கண்ணீா் புகைகுண்டு வீசியதால் எழுந்த புகை மண்டலம்.

கீடோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலுள்ள சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 62 போ் உயிரிழந்தனா். போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தக் கலவரம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு சிறைத் துறை இயக்குநா் எட்மண்டோ மோன்கயோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கியென்கா, குவாயாகுவில், லடாகியுங்கா ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அந்தச் சிறைகளில் இரு சமூகவிரோதக் குழுக்கள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது.

இதில், கியென்கா சிறையில் 33 போ், குவாயாகுவில் சிறையில் 21 போ், லடாகியுங்கா சிறையில் 8 போ் உயிரிழந்தனா்.

ஈக்வடாரிள்ள சிறைக் கைதிகளில் சுமாா் 70 சதவீதத்தினா் இந்த 3 சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனா்.

கலவரத்தைத் தொடா்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 800 போலீஸாா் அந்த சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com