இலங்கைக்கு ரூ. 363 கோடி கடனுதவி: இம்ரான் அறிவிப்பு

இலங்கைக்கு ரூ. 363 கோடி கடனுதவி: இம்ரான் அறிவிப்பு


கொழும்பு: பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், அந்த நாட்டுக்கு பாகிஸ்தான் 5 கோடி டாலா் (சுமாா் ரூ.363 கோடி) கடனுதவி அளிப்பதாக அந்த நாட்டுப் பிரதமா் இம்ரான் கான் அறிவித்துள்ளாா்.

இலங்கையில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், இந்த அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி, பயங்கரவாதத் தடுப்பு, அமைப்பு சாா் குற்றங்கள் தடுப்பு, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, உளவுத் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாகவும் இம்ரான் கான் மற்றும் இலங்கை அதிபா் மகிந்த ராஜபட்ச இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com