வூஹான் சென்றடைந்த உலக சுகாதார நிறுவனத்தின் கரோனா ஆய்வுக் குழு

கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு சீனாவின் வூஹான் நகரத்தை அடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு சீனாவின் வூஹான் நகரத்தை அடைந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சீனாவில் கரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொண்ட ஆய்வுக் குழு தயாராகி வந்தது. எனினும் சீனா அரசின் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் உலக சுகாதார நிறுவனம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சீனாவின் கடவுச்சீட்டு சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட ஆய்வுக் குழு வூஹான் நகரத்தை அடைந்தது. 14 நாள்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் ஆய்வுக்குழு ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொற்று தொடங்கிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com