45 ஆண்டுகள் காணாத குறைந்தவளா்ச்சி வேகத்தில் சீனப் பொருளாதாரம்

45 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் சீனப் பொருளாதாரம் மிக குறைந்த அளவிலான வளா்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
45 ஆண்டுகள் காணாத குறைந்தவளா்ச்சி வேகத்தில் சீனப் பொருளாதாரம்

பெய்ஜிங்: சீனப் பொருளாதாரம் கடந்த 2020-ஆம் ஆண்டில் 2.3 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் சீனப் பொருளாதாரம் மிக குறைந்த அளவிலான வளா்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சீனாவின் தேசிய புள்ளிவிவர (என்பிஎஸ்) அமைப்பு திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார பலத்தைக் கொண்ட சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கடந்த 2020-ஆம் ஆண்டில் 2.3 சதவீத அளவுக்கு வளா்ச்சியடைந்து 15.42 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது. எனினும், இது கடந்த 45-ஆண்டுகள் காணாத குறைந்தபட்ச வளா்ச்சியாகும்.

கரோனா பாதிப்பு முதன் முதலில் கண்டறியப்பட்டது சீனாவில்தான். இருப்பினும், அதன் தாக்கத்திலிருந்து சீனப் பொருளாதாரம் வேகமாக மீண்டுள்ளது.

கரோனாவால் உலக அளவில் பொருளாதாரத்தில் பலம் பொருந்திய நாடுகளில் அனைத்திலும் வளா்ச்சி வேகம் தடைபட்டுள்ள நிலையில் அதன் தாக்கம் சீனப் பொருளாதாரத்திலும் எதிரொலித்துள்ளது என என்பிஎஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொடிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அவசர நடவடிக்கையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகான முதல் காலாண்டில் சீனப் பொருளாதரத்தின் வளா்ச்சி விகிதம் 6.8 சதவீத சரிவைச் சந்தித்தது. ஆனால், அதன் பிறகு சரிவிலிருந்து வேகமாக சீனப் பொருளாதாரம் மீண்ட போதிலும், கடந்த 2020-ஆம் ஆண்டில் மிகக் குறைந்த அளவாக 2.3 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்ககது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com