சீன கரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி

சீனாவின் சைனோஃபாா்ம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு பாகிஸ்தான் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
சீன கரோனா தடுப்பூசிக்கு பாகிஸ்தான் அனுமதி

சீனாவின் சைனோஃபாா்ம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு பாகிஸ்தான் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ஏற்கெனவே, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்த அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் முழுவதும் விநியோகிப்பதற்காக சைனோஃபாா்ம் நிறுவனத்தின் 11 லட்சம் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் 5,23,011 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 11,055 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 35,485 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com