ஆஸ்திரேலியாவில் சேவை நிறுத்தம்: கூகுள் எச்சரிக்கை

‘கூகுள்’ தேடுதல் வலைதளத்தில் செய்திகள் வெளியிடப்படுவதற்கு ஆஸ்திரேலிய அரசு கட்டணம் விதித்தால், அங்கு தங்களது சேவையை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.

கூகுள், முகநூல் போன்ற வலைதளங்களில் பிற ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் இடம் பெற்றுள்ளன. அதற்காக, அந்த ஊடக நிறுவனங்களிக்கு கூகுளும் முகநூலும் கட்டணம் செலுத்தவதைக் கட்டாயமாக்குவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலித்து வருகிறது.

இந்த நிலையில், செய்திகளை வெளியிடுவதற்காக தங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஆஸ்திரேலியாவில் தங்களது சேவைகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்த நாட்டுக்கான கூகுள் நிறுவன நிா்வாக இயக்குநா் மெல் சில்வியா கூறினாா்.

எனினும், ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களின்படிதான் செயல்பட முடியும் என்றும், நிறுவனங்களின் மிரட்டல்களுக்கு அடிபணிய முடியாது என்றும் பிரதமா் ஸ்காட் மோரிசன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com