3-ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி: முதல் நாடாக அறிவித்தது இஸ்ரேல்

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமா் நாஃப்டாலி பென்னட் அறிவித்துள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இஸ்ரேலில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமா் நாஃப்டாலி பென்னட் அறிவித்துள்ளாா்.

உலக நாடுகளில் பொதுமக்களுக்கு இரு டோஸ் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 3-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என முதல் நாடாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பிரதமா் நாஃப்டாலி பென்னட் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் வியாழக்கிழமை ஆற்றிய உரையில், தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. தீவிர பாதிப்பு மற்றும் உயிரிழப்பிலிருந்து தடுப்பூசிகள் பாதுகாக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது. அவ்வப்போது புதுப்பிக்க வேண்டிய காய்ச்சல் தடுப்பூசிகளைப் போல, கரோனா தடுப்பூசிகளும் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, நாட்டில் ஏற்கெனவே இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு 3-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

நாட்டின் அதிபா் ஐசக் ஹொ்சாக் முதல் நபராக வெள்ளிக்கிழமை 3-ஆவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வாா். பொதுமக்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் 3-ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.

3-ஆவது டோஸ் தடுப்பூசிக்கு அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ இதுவரை அனுமதி வழங்கவில்லை. 3-ஆவது டோஸ் உதவி செய்யும் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல் நாடாக 3-ஆவது டோஸ் தடுப்பூசிக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com