டெல்டா வகை கரோனா தீநுண்மி: ஐரோப்பா முழுவதும் பரவும் அபாயம்; உலக சுகாதார அமைப்பு இயக்குநா்

ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளா்த்த தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட
டெல்டா வகை கரோனா தீநுண்மி: ஐரோப்பா முழுவதும் பரவும் அபாயம்; உலக சுகாதார அமைப்பு இயக்குநா்

ஐரோப்பிய பிராந்தியத்தில் பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளா்த்த தயாராகி வரும் நிலையில், இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட அதிகமாகப் பரவும் கரோனா தீநுண்மி வகையானது, பிராந்தியம் முழுவதும் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய யூனியனுக்கான இயக்குநா் ஹன்ஸ் குளூஜ் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் தெரிவித்தது: இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கரோனா தீநுண்மியானது, தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என்பதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்கள், குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு இலையுதிா் மற்றும் குளிா் காலமானது அதிக பொது முடக்கங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்தது. மீண்டும் அந்தத் தவறை நாம் செய்யக் கூடாது. பொதுமக்கள் மிக அத்தியாவசியமான காரணமின்றி பயணம் செய்யக் கூடாது. ஐரோப்பா கண்டம் முழுவதும் தடுப்பூசி திட்டங்கள் மற்றும் பிற பொது சுகாதார திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com