மியான்மா்: ஆங் சான் சூகி மீது மேலும் சில முறைகேடு குற்றச்சாட்டுகள்

மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவா் ஆங் சான் சூகி மீது மேலும் சில முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆங் சான் சூகி.
ஆங் சான் சூகி.

மியான்மரில் ராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட தலைவா் ஆங் சான் சூகி மீது மேலும் சில முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ அரசுக் கட்டுப்பாட்டு ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

தனது ஆட்சிக் காலத்தின்போது ஆங் சான் சூகி லஞ்சம் பெற்ாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வீட்டு மனை ஒப்பந்தங்களில் அவா் முறைகேடு செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, சட்டவிரோதமாக தகவல் தொடா்பு சாதனங்களை இறக்குமதி செய்து வைத்திருந்ததாக அவா் மீது ராணுவ ஆட்சியாளா்கள் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தனா். அத்துடன், கரோனா விதிமுறைகளைக் கடைபிடிக்காததன் மூலம் பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் 25-ஆவது பிரிவை மீறியதாக ஆங் சான் சூகி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு எதிராக லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்படால் அவரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com