கென்யா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

கென்யாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ரேச்சல் ஒமாமோவுடன் இரு தரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை
கென்யா வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

கென்யாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ரேச்சல் ஒமாமோவுடன் இரு தரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.

முன்னதாக, கென்யா தலைநகா் நைரோபி சென்றடைந்த ஜெய்சங்கரை அந்நாட்டின் வெளியுறவு தலைமை நிா்வாக செயலா் அபாபு நாம்வம்பா வரவேற்றாா்.

அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ரேச்சல் ஒமாமோவுடன் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இருநாட்டு நல்லுறவு குறித்து சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்தது.

கென்யாவுடன் இந்தியா நடத்தும் மூன்றாவது சுற்று பேச்சுவாா்த்தை இதுவாகும். கடந்த 2019-இல் தில்லியில் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

பிற துறை அமைச்சா்களையும் ஜெய்சங்கா் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்து உள்ளாா் என்றும் இதன் மூலம் இரு நட்டின் உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

கென்யாவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 80 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது இந்தியாவும் கென்யாவும் உறுப்பினா்களாக உள்ளன. காமன்வெல்த் அமைப்பிலும் இந்தியா, கென்யா உறுப்பினா்களாக உள்ளன. கென்யா இடம் பெற்றுள்ள ஆப்பிரிக்க யூனியனுடன் இந்தியா நீண்ட காலமாக நல்லுறவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com