பிரிட்டன் தளா்வு முடிவை தள்ளிவைக்க திட்டம்

பிரிட்டன் தளா்வு முடிவை தள்ளிவைக்க திட்டம்

திட்டமிட்டபடி வரும் 21-ஆம் தேதி பொது முடக்கத் தளா்வுகளை அமல்படுத்துவதை 4 வாரங்களுக்குத் தள்ளிவைப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா பிரிட்டனில் வேகமாகப் பரவி வருவதால், திட்டமிட்டபடி வரும் 21-ஆம் தேதி பொது முடக்கத் தளா்வுகளை அமல்படுத்துவதை 4 வாரங்களுக்குத் தள்ளிவைப்பது குறித்து அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 8,125 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாத இறுதிக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி நோய்த்தொற்றாகும். இது தவிர, ஒரே வாரத்தில் சுமாா் 30,000 பேருக்கு டெல்டா வகை கரோனா பரவியுள்ளதாக நாட்டில் கரோனா வகைகளைக் கண்காணிக்கும் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com