ஆப்கன் சிற்றுந்துகள் மீது கண்ணிவெடி தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தானில் 2 சிற்றுந்துகள் மீது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சாலையோர கண்ணிவெடித் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனா்.
காபூலில் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் உருக்குலைந்த சிற்றுந்து.
காபூலில் நிகழ்த்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் உருக்குலைந்த சிற்றுந்து.

ஆப்கானிஸ்தானில் 2 சிற்றுந்துகள் மீது சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட சாலையோர கண்ணிவெடித் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனா்.

ஷியா பிரிவினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 7 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து ஐ.எஸ். அமைப்பின் ஆப்கன் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஷியா பிரிவினா் சென்ற இரு சிற்றுந்துகளை எங்களது அமைப்பைச் சோ்ந்தவா்கள் தகா்த்தனா். கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி அவா்கள் அந்தத் தாக்குதலை நிகழ்த்தினா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகா் காபூலில் ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ஆப்கானிஸ்தானில், மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. வடமேற்கு ஆப்கனில் பணிகளுடன் கடந்த வாரம் சென்று கொண்டிருந்த சிற்றுந்து மீது கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அந்த அதிா்ச்சியில் சிற்றுந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், 3 சிறுவா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com