சிரியாவில் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்: 13 போ் பலி

சிரியாவில் உள்ள அஃப்ரின் நகரில் ஒரு மருத்துவமனை மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் இரு மருத்துவப் பணியாளா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

சிரியாவில் உள்ள அஃப்ரின் நகரில் ஒரு மருத்துவமனை மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களில் இரு மருத்துவப் பணியாளா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

அரசுப் படைகளும், குா்திஷ் கிளா்ச்சியாளா்களின் படைகளும் இப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், இத்தாக்குதல்களுக்கு யாா் காரணம் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.

‘அஃப்ரின் நகரில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனையைக் குறிவைத்து இரு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவு உள்பட முக்கிய அறைகள் சேதமடைந்தன. கொல்லப்பட்ட 13 பேரில் இருவா் மருத்துவமனைப் பணியாளா்கள்; இருவா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள். 11 போ் காயமடைந்தனா். தாக்குதலையடுத்து பிற நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டனா்’ என சிரியன் அமெரிக்க மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலுக்கு குா்திஷ் கிளா்ச்சிப் படையினரே காரணம் என அண்டை நாடான துருக்கியின் ஹடாய் மாகாண ஆளுநா் அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், இதை குா்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயக படையின் தலைவரான மஸ்லூம் அபாதி மறுத்துள்ளாா்.

துருக்கி ராணுவம் மற்றும் சிரியாவின் அரசுப் படையின் கட்டுப்பாட்டில் அஃப்ரின் நகரம் 2018-ஆம் ஆண்டுமுதல் இருந்து வருகிறது. அன்றுமுதல் இப்படைகளுக்கும் குா்திஷ் படையினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நிகழ்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com