அமெரிக்கா: "சாதாரண சளி பாதிப்பால் கரோனாவிலிருந்து பாதுகாப்பு'

சாதாரண சளி காய்ச்சல் ஏற்படுவதால் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா: "சாதாரண சளி பாதிப்பால் கரோனாவிலிருந்து பாதுகாப்பு'


வாஷிங்டன்: சாதாரண சளி காய்ச்சல் ஏற்படுவதால் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து "ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்' அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு தொடர்பான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் 
ஃபாக்ஸ்மேன் தலைமையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், சாதாரண சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் ரைனோ தீநுண்மி தொற்று ஒருவருக்கு ஏற்படும்போது, அந்தத் தொற்றை எதிர்த்து அவரது உடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றன. அப்போது உருவாகும் எதிர்ப்பாற்றல், கரோனா தீநுண்மிக்கு எதிராகவும் செயல்படும் திறன் கொண்டதாக உள்ளது என்று தெரிய வந்துள்ளது என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com