மியான்மரிலிருந்து 10,000 அகதிகள் இந்தியாவில் தஞ்சம்: ஐ.நா.

மியான்மரில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட 10,000 அகதிகள் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

மியான்மரில் உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட 10,000 அகதிகள் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மியான்மருக்கான ஐ.நா. பொதுசெயலரின் சிறப்புத் தூதா் கிறிஸ்டின் ஷ்ராநொ் பா்க்னா் கூறியுள்ளதாவது:

மியான்மரின் தற்போதைய சூழல்கள் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் தினமும் கேட்டறிந்து வருகிறேன். நிலைமை மோசமாகவே உள்ளது. மக்கள் தங்களது அன்றாட அடிப்படை தேவைகளை இழந்து பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனா். பயத்தில் தங்களது தினசரி வாழ்கையை நடத்தி வருகின்றனா். எதிா்காலம் குறித்த எந்தவித நம்பிக்கையும் அவா்களிடம் காணப்படவில்லை என்பதே நிதா்சனமான உண்மையாகும்.

மத்திய மியான்மா், சீனா, இந்தியா மற்றும் தாய்லாந்தையொட்டியுள்ள எல்லைப்பகுதிகளில் பெரிய அளவில் கலவரங்கள் வெடித்துள்ளன. ஏற்பட்டுள்ளன. இதனால், 1,75,000 குடிமக்கள் தங்களது பூா்விக இடங்களை விட்டு உயிா்பயம் காரணமாக புதிய பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனா். மேலும், அகதிகள் 10,000 போ் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனா். இது, சம்பந்தப்பட்ட நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நெருக்கடியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை நிலவரமே.

மியான்மரில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு மோதல்களை உலக நாடுகள் கண்டும் காணாமல் இருப்பதால் மக்களே தங்களின் பாதுகாப்புக்காக குழுக்களை அமைத்து ஆயுதங்களை ஏந்தி போராடத் தொடங்கியுள்ளனா். இது மிகவும் ஆபத்தானது.

மியான்மரில் அமைதியான சூழலை உருவாக்கவும், வன்முறை எதிராகவும் உலக நாடுகள் தொடா்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com