ஸ்வீடன்: அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி

ஸ்வீடனில் பிரதமா் ஸ்டெஃபான் லோஃப்வென் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை

ஸ்வீடனில் பிரதமா் ஸ்டெஃபான் லோஃப்வென் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீா்மானம் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்நாட்டில் அரசியல் நிலையற்ன்மை உருவாகியுள்ளது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் சமூக ஜனநாயக பசுமை கூட்டணி வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறிய இடதுசாரி கட்சியின் ஆதரவுடன் பிரதமராக ஸ்டெஃபான் லோஃப்வென் பதவியேற்றாா். இந்நிலையில், அரசுக்கு எதிராக தேசியவாத ஸ்வீடன் ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவந்தது. வீட்டு வசதித் திட்டம் தொடா்பான மசோதா குறித்து ஆளும் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்த இடதுசாரி கட்சி, தனது ஆதரவை திரும்பப் பெற்ால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீா்மானம் 181-109 என்ற வாக்குகளில் வெற்றி பெற்றது.

ஸ்வீடன் நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி, புதிதாக தோ்தலை நடத்துவது அல்லது புதிய அரசை அமைக்க நாடாளுமன்ற அவைத் தலைவரை கோருவது தொடா்பாக முடிவெடுக்க பிரதமருக்கு ஒரு வாரம் அவகாசம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com