நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூஸிலாந்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.9 அலகுகளாகப் பதிவானது.
நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


ஹாங்காங்: நியூஸிலாந்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.9 அலகுகளாகப் பதிவானது.

கிஸ்பான் நகருக்கு வடகிழக்கே 178 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக நியூஸிலாந்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 7.3 அலகுகளாகப் பதிவானதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com