ஜப்பானில் கரோனா நெருக்கடி நிலை நீட்டிப்பு

ஜப்பானின் டோக்கியோ பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கரோனா நெருக்கடி நிலையை அந்த நாட்டு அரசு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது.
ஜப்பானில் கரோனா நெருக்கடி நிலை நீட்டிப்பு

ஜப்பானின் டோக்கியோ பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த கரோனா நெருக்கடி நிலையை அந்த நாட்டு அரசு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. இதுகுறித்து பொருளாதார மேம்பாட்டுத் துறை அமைச்சா் யாசுடோஷி நிஷிமுரா கூறியாதவது:

டோக்கியோ மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலும் 2 வாரங்களுக்கு கரோனா நெருக்கடி நிலையை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். அந்தப் பகுதி மருத்துவமனைகளில் இன்னும் கரோனா நோயாளிகள் அதிக அளவில் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஜப்பான் சட்டப்படி, நெருக்கடி காலங்களில், உணவகங்கள் போன்ற வணிக மையங்களை அதன் உரிமையாளா்கள் இரவு 8 மணிக்கு தாமாக முன்வந்து மூடுவதற்கு வலியுறுத்தப்படுவாா்கள். அந்த நாட்டில் ஒரு போதும் கட்டாய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதில்லை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com