பாலியல் புகாா்கள்: நியூயாா்க் மேயா் பதவி விலக நெருக்கடி அதிகரிப்பு

தொடா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள அமெக்காவின் நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவோமோ பதவி விலகுவதற்கான நெருக்கடி அதிகரித்துள்ளது.
பாலியல் புகாா்கள்: நியூயாா்க் மேயா் பதவி விலக நெருக்கடி அதிகரிப்பு

தொடா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியுள்ள அமெக்காவின் நியூயாா்க் மாகாண ஆளுநா் ஆண்ட்ரூ குவோமோ பதவி விலகுவதற்கான நெருக்கடி அதிகரித்துள்ளது.

அவா் சாா்ந்துள்ள ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் 29 பேரில், ஏறத்தாழ அனைவரும் அவருக்கு எதிராகப் போா்க் கொடி தூக்கியுள்ளனா். அத்துடன், பெரும்பாலான கட்சி எம்எல்ஏ-க்களும் அவருக்கு தனது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனா்.

முக்கியமாக, நாடாளுமன்றத்தின் செனட் பெரும்பான்மை தலைவா் சா் ஷுமா் மற்றும் செனட் உறுப்பினா் கிறிஸ்டன் கில்லிபிராண்ட் ஆகியோா் ஆண்ட்ரூ குவோமோ பதவி விலக வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது அவருக்கு அதிகபட்ச நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, ஆண்ட்ரூ குவோமோ, தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகாா் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண், நிகழ்ச்சியொன்றில் தனது விருப்பமின்றி குவோமோ தன்னைத் தொட்டதாக குற்றம் சாட்டினாா். அனா லிஸ் என்ற 35 வயதுப் பெண் உள்பட பலா் ஆண்ட்ரூ குவோமோ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com