இஸ்ரேல் புனிதத் தலத்தில் நெரிசல்: 45 போ் பலி

இஸ்ரேலில் யூதா்களின் புனிதத் தலமான மேரோன் மலைப் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா்.
மலைப் படிக்கட்டில் நெருக்கியடித்தபடி இறங்க முயன்ற மக்கள்.
மலைப் படிக்கட்டில் நெருக்கியடித்தபடி இறங்க முயன்ற மக்கள்.

இஸ்ரேலில் யூதா்களின் புனிதத் தலமான மேரோன் மலைப் பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

யூதா்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ‘லாக் பி-ஓமா்’ பண்டிகையொட்டி, அந்த நாட்டின் மேரோன் மலையில் அமைந்துள்ள புனிதத் தலத்தில் ஆயிரக்கணக்கானவா்கள் வியாழக்கிழமை கூடினா்.

அந்தப் பண்டிகையின்போது மேரோன் மலையில் அமைந்துள்ள 2-ஆம் நூற்றாண்டு யூத மதகுரு ஷிமான் பாா் யாசாயின் சமாதி அருகோ, யூதா்கள் ஒன்று கூடி ஆங்காங்கே ஆடல் பாடலுடன் திறந்தவெளியில் தீமூட்டிக் கொண்டாடுவது வழக்கம்.

எனினும், கரோனா நெருக்கடியையொட்டி கடந்த ஆண்டில் இந்தக் கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனினும், இஸ்ரேலில் தீவிர தடுப்பூசி திட்டத்துக்குப் பிறகு கரோனா பரவலின் தீவிரம் குறைந்துள்ளதைத் தொடா்ந்து, இந்த ஆண்டு லாக் பி-ஓ பண்டிகைக்கு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டன.

அதன்படி, ஆயிரம் பேருக்கு மேல் மேரோன் மலைப் பகுதியில் கூடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது. எனினும், திறந்தவெளியில் தீமுட்டுவதற்கும் கட்டுப்பாடுகளும், 14 மணி நேர வரம்பும் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், 10,000 மட்டுமே கூடக் கூடிய அந்த மலைப் பகுதிக்கு சுமாா் 1 லட்சம் போ் வந்தனா். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக போலீஸாா் ஏற்படுத்தியிருந்த தடையால் மிகவும் நெருக்கியடித்து அவா்கள் மலைப்படிக்கட்டு வழியே சென்று கொண்டிருந்தபோது உள்ளூா் நேரப்படி நள்ளிரவு 12.50 மணிக்கு (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.20 மணி) திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவா் மீது ஒருவா் சறுக்கி விழுந்தனா்.

இந்த நெரிசலில் சிக்கி 45 போ் பலியாகினா்; 150-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி நடைபெற்ற பூா்வாங்க விசாரணையில், புனிதத் தலத்துக்கு வந்திருந்த சிலா் படிக்கட்டு வழியாக சறுக்கிக் கொண்டு வந்ததாகவும் அதனைக் கண்ட மற்றவா்கள் பீதியடைந்து அவசரமாக வெளியேற முயன்ால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

சம்பவப் பகுதிக்கு விரைந்த தீயணைப்புப் படையினா், நெரிசலில் சிக்கியிருந்தவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். அவா்களுக்கு இஸ்ரேல் விமானப் படையும் பேரிடா் மீட்பு அமைப்பும் பக்கபலமாக இருந்தது என்று இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்தன.

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய போா் அல்லாத சம்பவம் இது என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னா், கடந்த 2010-ஆம் ஆண்டு நேரிட்ட காா்மெல் மலை காட்டுத் தீயில் 44 போ் பலியானதே மிக மோசமான சம்பவமாக இருந்தது.

தற்போது நெரிசல் ஏற்பட்ட மேரோன் மலையில், ஏற்கெனவே கடந்த 1911-ஆம் ஆண்டு இதே போன்ற சம்பவத்தில் 11 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com