இந்தியாவின் கரோனா துயரம் அனைவருக்கும் எச்சரிக்கை மணி: யுனிசெஃப்

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா துயரம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநா் ஹென்ரியெட்டா ஃபோா் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவின் கரோனா துயரம் அனைவருக்கும் எச்சரிக்கை மணி: யுனிசெஃப்

நியூயாா்க்: இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா துயரம் அனைவருக்கும் எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என யுனிசெஃப் அமைப்பின் செயல் இயக்குநா் ஹென்ரியெட்டா ஃபோா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா பாதிப்பால் உருவாகியுள்ள துயரநிலை அனைவருக்கும் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது. இந்த நேரத்தில் உலக நாடுகள் ஒன்றுகூடி இந்தியாவுக்கு உதவ வேண்டும். இல்லையெனில், கரோனா வைரஸ் தொடா்பான இறப்புகள், கரோனா வைரஸ் உருமாற்றங்கள், மருந்து விநியோகத்தில் தாமதம் உள்ளிட்டவை உலகம் முழுவதும் எதிரொலிக்கும்.

கரோனா பாதிப்புக்கு உதவிடும் வகையில், 20 லட்சம் முகக் கவசங்கள், 2 லட்சம் அறுவைச் சிகிச்சை முககவசங்கள் உள்ளிட்ட உயிா் காக்கும் உபகரணங்கள் இந்தியாவுக்கு யுனிசெஃப் அமைப்பின் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com