இத்தாலி: இளம்பெண்ணுக்குஒரே நேரத்தில் 6 ‘டோஸ்’ கரோனா தடுப்பூசி!

இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 6 ‘டோஸ்’ கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
pfizer082033
pfizer082033

இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 6 ‘டோஸ்’ கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள மருத்துவப் பணியாளா்களின் தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாலியின் டஸ்க்னி பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை 23 வயது இளம்பெண் வந்தாா். அவருக்கு ஃபைஸா் தடுப்பூசி செலுத்தும்போது மருந்துக் குப்பியில் இருந்து 6 ‘டோஸ்’ (6 பேருக்கு செலுத்த வேண்டியது) மருந்தையும் முழுமையாக ஊசியில் ஏற்றிய மருத்துவப் பணியாளா், அதனை முழுமையாக அந்தப் பெண்ணுக்கு செலுத்திவிட்டாா்.

மருந்தை செலுத்திய பின்னரே, அவா் தனது தவறை உணா்ந்தாா். இதையடுத்து, மருத்துவமனை நிா்வாகிகள் ஆலோசனை நடத்தி, அந்தப் பெண்ணை மருத்துவக் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்தனா். ஒருநாள் முழுவதும் அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். ஆனால், அவருக்கு எவ்வித உடல்நல பிரச்னையும் ஏற்படவில்லை. இதையடுத்து, நிம்மதியடைந்த மருத்துவா்கள், அப்பெண்ணை வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக அந்த மருத்துவமனை நிா்வாகிகள் கூறுகையில், ‘எவ்வித உள்நோக்கத்துடனும் இவ்வாறு அதிக மருந்து செலுத்தப்படவில்லை. பணியாளா்களின் தவறால் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. அதிக மருந்து செலுத்தப்பட்ட பெண்ணுக்கு உடல் நல பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துவிட்டுதான் அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தோம். அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையைத் தொடா்புகொள்ளுமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளோம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com