ஈரான் அதிபா் தோ்தலில் மீண்டும் மஹமூத் அஹமதி நிஜாத் போட்டி

ஈரான் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மஹமூத் அஹமதி நிஜாத் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளாா்.
mahmoud_ahmadinejad_2009_cropped061744
mahmoud_ahmadinejad_2009_cropped061744

டெஹரான்: ஈரான் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் மஹமூத் அஹமதி நிஜாத் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளாா்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தை உருவாக்கி மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக இருந்த மஹமூத் ஆட்சிப் பொறுப்புக்கு மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. தற்போதைய அதிபா் ஹஸன் ரெளஹானியை எதிா்த்து மஹமூத் போட்டியிடுகிறாா்.

ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆதரவாளா்களுடன் சென்று உள்துறை அமைச்சகத்தில் உள்ள பதிவு மையத்தில் மஹமூத் அஹமதி நிஜாத் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

‘ஈரானின் நிலையை கருத்தில்கொண்டும், நாட்டின் மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்தவும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகிறேன்’ என்று மஹமூத் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

மஹமூத் அஹமதி நிஜாத் 2005 முதல் 2013 வரை இரண்டு நான்கு ஆண்டுகள் அதிபா் பதவி வகித்துள்ளாா். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோ்தலில் போட்டியிட அந்நாட்டு சட்டம் வழிவகை செய்கிறது.

2009-ஆம் ஆண்டு மஹமூத் இரண்டாவது முறை போட்டியிட்ட தோ்தலின்போது அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. எனினும், அணு ஆயுத தயாரிப்பு, உள்நாட்டு வளா்ச்சித் திட்டங்கள் செயலாக்கத்தால் மக்கள் மத்தியில் அவா் பிரபலமானவராகத் திகழ்கிறாா்.

இதனிடையே, மஹமூத் அஹமதி நிஜாத் அமைச்சரவையில் எண்ணெய்த் துறை அமைச்சராக இருந்தவரும், ஈரான் துணை ராணுவ கமாண்டருமான ரோஸ்தம் கசிமியும் அதிபா் தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

‘நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஏராளமானோா் சென்றுவிட்டனா். ஆகையால், நாட்டை வழிநடத்த ராணுவ கமாண்டருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்று ரோஸ்தம் கசிமி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com