ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது நேபாள காங்கிரஸ் கட்சி

நேபாளத்தில் முக்கிய எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது.
ஆட்சி அமைக்க உரிமை கோருகிறது நேபாள காங்கிரஸ் கட்சி

காத்மாண்டு: நேபாளத்தில் முக்கிய எதிா்க்கட்சியான நேபாள காங்கிரஸ் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது.

நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததையடுத்து, வியாழக்கிழமைக்குள் புதிய அரசு அமைக்க அந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அதிபா் வித்யாதேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தாா்.

இந்நிலையில், நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினா். ஏற்கெனவே ஆதரவு அளித்து வரும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் - மாவோயிஸ்ட் மையம் கட்சியுடன் சோ்த்து நேபாள ஜனதா சமாஜவாதி கட்சியின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க நேபாள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மொத்தம் 271 உறுப்பினா்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் நேபாள காங்கிரஸ் கட்சிக்கு 61 எம்.பி.க்களும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் - மாவோயிஸ்ட் மையம் கட்சிக்கு 49 எம்.பி.க்களும் உள்ளனா். நேபாள ஜனதா சமாஜவாதி கட்சிக்கு 32 எம்.பி.க்கள் உள்ளனா். ஆகையால், ஆட்சி அமைப்பதில் நேபாள ஜனதா சமாஜவாதி கட்சி முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com