சண்டையை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
சண்டையை நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரின் ஏவுகணை தாக்குதல், இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் என இடைவிடாமல் சண்டை தொடரும் நிலையில், இதுதொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. காணொலி முறையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் பேசியது: காஸா மற்றும் இஸ்ரேலில் தற்போது நடந்துவரும் வன்முறையானது மரணம், அழிவு, விரக்தி ஆகியவற்றையே மாறிமாறி நிலைநிறுத்துகிறது; சகவாழ்வு, சமாதானத்தின் நம்பிக்கையை தகா்க்கிறது. இருதரப்பிலும் உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும் என்றாா்.

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு பேசுகையில், சண்டையை நிறுத்துவதற்கு ராஜீய வழியில் அமெரிக்கா தொடா்ந்து முயன்று வருகிறது. இரு தரப்பும் ஆயுத மோதலுக்குத் திரும்புவது இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்குத் தீா்வு கிடைக்க விடாமல் செய்துவிடும் என எச்சரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com