இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 13 சதவீதம் குறைவு: உலக சுகாதார அமைப்பு

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 13 சதவீதம் குறைவு: உலக சுகாதார அமைப்பு

நியூயாா்க்: இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா பாதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 16-ஆம் தேதி வரையிலான கரோனா பாதிப்பு நிலவரத்தை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த வாரத்தில் உலக அளவில் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்படுவது 12 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோல் உயிரிழப்புகளும் 5 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் புதிதாக 23,87,663 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். அதைத் தொடா்ந்து, பிரேசிலில் புதிதாக 4,37,076 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இது, 3 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் 21 சதவீதம் குறைந்துள்ளது. ஆா்ஜெண்டீனாவில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. கொலம்பியாவில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

உயிரிழப்பை பொருத்தவரை இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் புதிதாக 27,922 போ் உயிரிழந்தனா். அதாவது உயிரிழப்பு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. நேபாளத்தில் 1,224 பேரும், இந்தோனேசியாவில் 1,125 பேரும் உயிரிழந்தனா்.

மே மாதம் 9-ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் புதிதாக 27,38,957 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இது, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகமாகும்.

உலகளவில் கடந்த மூன்று வாரங்களாக புதிதாக தொற்று ஏற்படுவது குறைந்து வந்தாலும், சில பகுதிகளில் இன்னும் புதிதாக தொற்று ஏற்படுவது அதிகமாகவே உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com