2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு

2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 
2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: இருவருக்கு பகிர்ந்தளிப்பு

2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. 

வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ்(David Julius), ஆர்டெம் பட்டபௌஷியன்(Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகளில் அவற்றின் செயல்பாடுகளை தெளிவுபடுத்துவதுடன் நாள்பட்ட வலி உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயன்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com