ரஷியாவில் 24 மணி நேரத்தில் 1,072 பேர் கரோனாவுக்கு பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,660 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,660 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியா கரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 35,660 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 82,41,643 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,072 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,30,600 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 22,784 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 71,65,921 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாஸ்கோவில் 5,279 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரை பொது முடக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது. உணவகங்கள், அழகு நிலையங்கள், விளையாட்டு மையங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com