பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 91,097 பேர் பாதிப்பு, பலி 3,769

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 91,097 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. மேலும் 3,769 பேர் பலியாகியுள்ளனர். 
brazil093326
brazil093326

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 91,097 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளது. மேலும் 3,769 பேர் பலியாகியுள்ளனர். 

உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது, மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கடந்த 24 மணி நேர நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது, 

அதன்படி நாட்டில் புதிதாக 91,097 பேர் தொற்று பாதித்த நிலையில், மொத்த பாதிப்பு 12,83,9,844 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 3,25,284 ஆக உள்ளது. 

அதிக மக்கள் தொகை கொண்ட லத்தீன் அமெரிக்காவில் மார்ச் மாதத்தில் மட்டும் 66,868 பேர் கரோனா தொற்று காரணமாக 66,868 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாட்டின் பெரும்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தனிமைப்படுத்தலுக்கும், இரவு ஊரடங்கு உத்தரவுக்கும் உள்படுத்தப்பட்டுள்ளது.

பிரேசிலின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான சாவ் பாலோ ஏப்ரல் 12 வரை அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளனர். 

ஜன.17 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி பிரேசிலில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை 1,76,20,872 பேர் கரோனா தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். மேலும், 5,091,611 பேர் இரண்டாவது கட்ட தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com