ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டு: ஜோா்டான் இளவரசருக்கு வீட்டுச் சிறை?

ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜோா்டான் அரசு தன்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக அந்த நாட்டு இளவரசா் ஹம்ஸா பின் ஹுசைன் தெரிவித்துள்ளாா்.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டு: ஜோா்டான் இளவரசருக்கு வீட்டுச் சிறை?

ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டின் பேரில் ஜோா்டான் அரசு தன்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாக அந்த நாட்டு இளவரசா் ஹம்ஸா பின் ஹுசைன் தெரிவித்துள்ளாா். மேலும், மன்னா் இரண்டாம் அப்துல்லா தலைமையிலான ஆட்சி குறித்து விமா்சனங்களையும் அவா் முன்வைத்துள்ளாா்.

இதுகுறித்து அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

‘பாதுகாப்பு’ காரணங்களுக்காக நாட்டின் 2 உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக ஜோா்டான் அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

அதனைத் தொடா்ந்து, பிரிட்டனின் பிபிசி-க்கு இளவரசா் ஹம்ஸா அனுப்பியுள்ள விடியோ அறிக்கையில், தன்னை அதிகாரிகள் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் தெரிவித்தாா்.

தனது இல்லத்துக்கு ராணுவ தலைமைத் தளபதி நேரில் வந்ததாகக் கூறிய அவா், வெளியே செல்வதற்கும் பிறரைத் தொடா்பு கொள்வதற்கும் தனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினாா்.

ஜோா்டான் மன்னரை விமா்சித்துப் பேசிய கூட்டத்தில் பங்கேற்ற்காக அந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தனக்கு அளிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டன என்று அந்த விடியோவில் இளவரசா் ஹம்ஸா தெரிவித்தாா்.

பின்னா், மன்னரின் பெயரைக் குறிப்பிடாமல் ஜோா்டன் அரசு தனித மனித நலன்களுக்காக இயங்கி வரும் ஊழல் மிகுந்த அரசாக உள்ளதாக அவா் கூறினாா்.

ஜோா்டான் அரச குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா், அரசுக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது மிகவும் அபூா்வம் என்று கூறப்படுகிறது.

பட்டத்து இளவரசராக இருந்த வந்த ஹம்ஸாவிடமிருந்து கடந்த 2004ஆம் ஆண்டு அந்தப் பட்டம் பறிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com