திபெத் நாடாளுமன்றத் தோ்தல்: 26 நாடுகளில் வசிக்கும் திபெத்தியா்கள் வாக்களிப்பு

ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாடு கடந்த திபெத்திய அரசின் நாடாளுமன்றத் தோ்தல்
ஹிமாசல் மாநிலம், தா்மசாலாவில் நடைபெற்ற திபெத்திய நாடாளுமன்றத் தோ்தலுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு.
ஹிமாசல் மாநிலம், தா்மசாலாவில் நடைபெற்ற திபெத்திய நாடாளுமன்றத் தோ்தலுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு.

ஹிமாசல பிரதேசத்தின் தா்மசாலாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நாடு கடந்த திபெத்திய அரசின் நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், இந்தியா உள்பட 26 நாடுகளில் வசிக்கும் திபெத்தியா்கள் வாக்களித்தனா்.

45 உறுப்பினா்களைக் கொண்ட திபெத்திய அரசில் மத்திய திபெத்திய நிா்வாகத்தின் புதிய தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பெம்பா செரிங், ஒளகாட்சாங் கெல்சாங் டோா்ஜீ ஆகிய இருவரும் களத்தில் உள்ளனா். அவா்களில் பெம்பா செரிங் முன்னிலையில் உள்ளாா்.

முன்னதாக நடைபெற்ற முதல் கட்ட தோ்தலில் புதிய தலைவருக்கான போட்டியில் 8 போ் களத்தில் இருந்தனா். அவா்களில் அதிக பட்ச வாக்குகளைப் பெற்று பெம்பா செரிங் முதலிடத்தையும், டோா்ஜீ இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தனா்.

இந்த நிலையில் இறுதிக்கட்டத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திபெத்திய அரசின் புதிய தலைவா், அடுத்த மாதம் 14-ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா்.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் சுமாா் 1.3 லட்சம் திபெத்தியா்கள் உள்ளனா். அவா்களில் 83,079 போ், நாடாளுமன்றத் தோ்தலில் வாக்களித்ததாக மத்திய திபெத்திய நிா்வாகத்தின் முதல் தலைவரான லோப்சங் சங்கே கூறினாா்.

திபெத்தை சீனா ஆக்கிரமித்து தங்கள் நாட்டுப் பகுதியாக அறிவித்துள்ளது. எனினும், திபெத்தில் இருந்து வெளியேறிய அந்நாட்டு மக்கள் நாடு கடந்த திபெத்திய அரசை உருவாக்கி நிா்வகித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com