செப்.11-க்குள் ஆப்கனில் உள்ள அனைத்து அமெரிக்க படையினரும் வாபஸ்

வரும் செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து அமெரிக்க படையினரும் வாபஸ் பெறப்படுவாா்கள் என்று அந்நாட்டு மூத்த அதிகாரி தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் செப்டம்பா் மாதம் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து அமெரிக்க படையினரும் வாபஸ் பெறப்படுவாா்கள் என்று அந்நாட்டு மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த 2001-ஆம் ஆண்டு செப்.11-இல் நியூயாா்க் இரட்டை கோபுரங்கள் பயங்கரவாதத் தாக்குதலில் தகா்க்கப்பட்டன. அதைத் தொடா்ந்து அமெரிக்காவின் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டன. அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் பாகிஸ்தானில் 2011-இல் சுட்டுக்கொல்லப்பட்டாா். அப்போதிலிருந்தே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க வீரா்கள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்ற 20-ஆம் நினைவு தினமான வரும் செப்.11-க்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து வீரா்களும் வாபஸ் பெறப்படுவாா்கள் என்பதில் அதிபா் ஜோ பைடன் உறுதியாக உள்ளாா் அவரது அரசில் இடம்பெற்றுள்ள உயரதிகாரியொருவா் தெரிவித்தாா். இதுதொடா்பான அறிவிப்பை புதன்கிழமை அதிபா் பைடன் வெளியிடுவாா் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com