ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்: ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும்: ஜோ பைடன்


வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்தவாறு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி, பயங்கரவாதத் தாக்குதலின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுடன் நடைபெற்று வரும் போரில் உயிரிழந்த அமெரிக்கப் படை வீரர்களின் நினைவிடத்துக்குச் சென்று ஜோ பைடன் அஞ்சலி செலுத்தினார்.

ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அல் கய்தா பயங்கரவாதிகள், கடந்த 2001-ஆம் ஆண்டு விமானத்தைக் கடத்திச் சென்று அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தகக் கட்டத்தின் மீது மோதச் செய்து நடத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com