ஆப்கன் அமைதி மாநாடு ஒத்திவைப்பு

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு சண்டையிட்டு வரும் பல்வேறு குழுக்களிடையே சனிக்கிழமை தொடங்குவதாக இருந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி.
காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி.

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அங்கு சண்டையிட்டு வரும் பல்வேறு குழுக்களிடையே சனிக்கிழமை தொடங்குவதாக இருந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறுவதாக இருந்த அந்த மாநாடு, ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் பாதுகாப்புப் படையினா் மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சா் மேவ்லுட் காவுசோக்லு கூறுகையில், மே மாத மத்தியில் ரம்ஜான் மாதம் முடிவடைந்த பிறகு அந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவித்தாா்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேற ஆயத்தமாகி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. இதில் 5 போ் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com