‘இந்தியாவிற்கு உதவ தயாராக இருக்கிறோம்’: பிரான்ஸ்

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3.32 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுடன் பிரான்ஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த பேரிடரில் இருந்து மீள இந்தியாவிற்கு அனைத்து வகைகளிலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com