சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் டேங்கா்கள் இந்தியா வருகை

கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜனைக் கொண்டு செல்லும் நான்கு கிரையோஜெனிக் காலி டேங்கா்கள் சிங்கப்பூரில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்கு இந்த பெரிய அளவிலான ஆக்சிஜன் டேங்கா்கள் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆய்வு நடத்தினாா். அப்போது, சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஆக்சிஜன் டேங்கா்களைக் கொண்டு வருவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்தப் பெரிய கிரையோஜெனிக் டேங்கா்களைக் கொண்டு வருவதற்காக இந்திய விமானப் படையின் மிகப் பெரிய சரக்கு விமானமான ஏ சி-17 ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் இருந்து சனிக்கிழமை காலை சிங்கப்பூா் சாங்கி விமான நிலையத்துக்கு புறப்பட்டது.

அங்கிருந்து நான்கு டேங்கா்களுடன் மேற்கு வங்கத்தில் உள்ள பனாகா் விமான படைத்தளத்துக்கு சனிக்கிழமை மாலை வந்திறங்கியதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com