கில்ஜித்-பல்டிஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து: தயாரானது மசோதா

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ல கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியை அந்த நாட்டின் மாகாணமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ல கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியை அந்த நாட்டின் மாகாணமாக்குவதற்கான சட்ட மசோதாவுக்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீா், லடாக் பகுதியுடன் கில்ஜித்-பல்டிஸ்தானும் இந்தியாவின் ஓா் அங்கம் என்று இந்தியா உறுதியாகக் கூறி வரும் சூழலில், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை சா்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து டான் நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக அங்கீகரிப்பதற்கான வரைவு சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டு சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம் இறுதிவடிவம் கொடுத்துள்ளது.

அந்த மசோதாவில், கில்ஜித்-பல்டிஸ்தானுக்காக பிரத்யேகமாக செயல்பட்டு வரும் மேல்முறையீட்டு உச்ச நீதிமன்றத்தை கலைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அந்தப் பகுதிக்காக தனியாக செயல்பட்டு வந்த தோ்தல் ஆணையத்தை பாகிஸ்தான் தோ்தல் ஆணையத்துடன் இணைப்பதற்கும் அந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் அரசமைப்புச் சட்டம், சா்வதேசச் சட்டங்கள், காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட ஐ.நா.வின் பல்வேறு முக்கியத் தீா்மானங்களை அலசி ஆராய்ந்த பிறகே இந்த மசோதா உருவாக்கப்பட்டதாக சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட கில்ஜித்-பல்டிஸ்தான் அரசு மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த மசோதா வரையப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறின.

கில்ஜித்-பல்டிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாக அங்கீகரிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 1-ஆவது பிரிவில் திருத்தம் செய்யப்படும். நாடாளுமன்றத்தில் அந்த மாகாணத்துக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான வழிவகைகளும் அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

‘26-ஆவது சட்டத் திருத்த மசோதா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த மசோதா, காஷ்மீா் தொடா்பான பாகிஸ்தானின் நோக்கங்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com