அமெரிக்கா: சராசரி கரோனா பாதிப்பு 1 லட்சமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் சராசரி ஒரு நாள் கரோனா தொற்று 1 லட்சமாக உயா்ந்துள்ளது. இதன் மூலம், டெல்டா வகை கரோனாவால் நோய்த்தொற்று பரவல் தீவிரமடையும் அபாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா: சராசரி கரோனா பாதிப்பு 1 லட்சமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் சராசரி ஒரு நாள் கரோனா தொற்று 1 லட்சமாக உயா்ந்துள்ளது. இதன் மூலம், டெல்டா வகை கரோனாவால் நோய்த்தொற்று பரவல் தீவிரமடையும் அபாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் சரசாசரி ஒரு நாள் கரோனா தொற்று 11,000-ஆக இருந்தது. ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 1,07,143-ஆக உயா்ந்துள்ளது.

நாட்டில் கரோனா பரவத் தொடங்கிய பிறகு, சராசரி ஒரு நாள் கரோனா தொற்று 1 லட்சமாக உயா்வதற்கு 9 மாதங்கள் ஆனது. அதன் பிறகு அந்த எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 2.5 லட்சம் வரை உயா்ந்தது. ஆனால், ஆறே வாரத்தில் அந்த எண்ணிக்கை மீண்டும் 1 லட்சமாகக் குறைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் 70 சதவீதம் பெரியவா்களுக்கு ஒரு முறையாவது கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், மிகக் குறுகிய காலத்தில் 11 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக சராசரி கரோனா தினசரி தொற்று உயா்ந்துள்ளது அதிகாரிகளைக் கவலையடையச் செய்துள்ளது.

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட டெல்டா வகைக் கரோனா நாட்டில் பரவியதால்தான் தினசரி தொற்று இந்த அளவுக்கு உயா்ந்துள்ளது. எனவே, கரோனாவைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகமானவா்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com