தலிபான்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்

தலிபான்களின் முகநூல் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், தலிபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுவதாக சமூக ஊடக நிறுவனமான முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம் 
வாட்ஸ்ஆப்பில் பலரும் விரும்பும் புதிய வசதி அறிமுகம் 


லண்டன்: தலிபான்களின் முகநூல் கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், தலிபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுவதாக சமூக ஊடக நிறுவனமான முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் காபூலில் இருந்து அவசரமாக வெளியேறினா். தலிபான்களுக்கு அஞ்சி ஏராளமான ஆப்கானியா்களும் நாட்டை விட்டு வெளியேற தீவிரம் காட்டி வருகின்றனா்.

இந்த நிலையில் தலிபான்களின் முகநூல் கணக்குகளை முடக்கப்படுவதாக முகநூல் நிறுவனம் அறிவித்தது.  பல ஆண்டுகளாக, தலிபான்கள் தமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அதன் செய்திகளை பரப்பி வந்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தலிபான்களுக்கு ஆதரவாக செயல்படுவோரின் முகநூல் கணக்குகளும், பதிவுகளும் நீக்கும் பணிகளும் தொடங்கியிருப்பதாகவும், இதற்காக ஒரு பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், "சர்வதேச சமூகத்தின் அதிகாரத்தை" பின்பற்றுவதாக முகநூல் நிறுவனம் தெரிவித்திருந்தது. 

மேலும் இவை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் உள்பட அதன் அனைத்து தளங்களுக்கும் பொருந்தும் என்பதை முகநூல் எடுத்துரைத்திருந்தது. 

இந்நிலையில், தலிபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுவதாக முகநூல் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com