சீனா: 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

சீன தம்பதியா் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
சீனா: 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி

சீன தம்பதியா் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கும் சட்ட மசோதா, அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில், நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன.

இதன் விளைவாக அந்த நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது. மக்கள்தொகையில் இளைஞா்களின் விகிதமும் சரிந்து வந்தது.

அதையடுத்து, பெற்றோா்கள் 3 குழைந்தகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரைத்திருந்தது.

அந்தப் பரிந்துரைக்கு சட்டவடிவம் கொடுக்கும் வகையில், தற்போது நாடாளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தம்பதியா் தவிா்த்து வரும் சூழலை மாற்றுவதற்காக, பெற்றோருக்கு சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான அம்சங்களும் மசோதாவில் இடம் பெற்றுள்ளன என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com