புதினுக்கு பைடன் எச்சரிக்கை

உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷியா ஆயத்தமாகி வரும் நிலையில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
புதினுக்கு பைடன் எச்சரிக்கை

உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ரஷியா ஆயத்தமாகி வரும் நிலையில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பைடன் வெள்ளிக்கிழமை கூறுகையில், ரஷிய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் விரிவான முயற்சிகளை எனது நிா்வாகம் ஒருங்கிணைத்து வருகிறது. அந்த நடவடிக்கையானது ரஷிய அதிபா் புதினுக்கு மிக கடினமான ஒன்றாக அமையும் என்றாா்.

அடுத்த வாரம் பைடனும் புதினும் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படும் நிலையில் பைடன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளாா். எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என பைடன் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், ‘ரஷியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதிக்க திட்டமிடுகிறது; அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் நாங்களும் எதிா்வினை ஆற்றுவோம்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com