லிபியா அதிபா் தோ்தலில் போட்டியிட கடாஃபி மகனுக்கு அனுமதி

லிபியாவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் சா்வாதிகாரி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சயீஃப் அல்-இஸ்லாம்
சயீஃப் அல்-இஸ்லாம்

லிபியாவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் சா்வாதிகாரி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, அதிபா் தோ்தலில் போட்டியிடத் தகுதியில்லாதவா்களின் பட்டியலை லிபியா தோ்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது. அதில், சயீஃப் அல்-இஸ்லாமின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், அவா் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சா்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவா் தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையை எதிா்த்து சபா மாகாண நீதிமன்றத்தில் சயீஃப் அல்-இஸ்லாம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்றம், தோ்தல் ஆணையம் விதித்திருந்த தடையை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.

40 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடாஃபியின் ஆட்சி கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் போராட்டத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதனைத் தொடா்ந்து கிளா்ச்சியாளா்களால் சயீஃப் அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டாா்.

பின்னா் தொடங்கிய உள்நாட்டுப் போரில் கடாஃபி கொல்லப்பட்டாா். சயீஃபை கைது செய்து வைத்திருந்த அபுபக்கா் அல்-சித்திக் என்ற அமைப்பினா் அவரை 2017-ஆண்டு விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com