மண்டேலா சிறைச் சாவி ஏலம்: தென் ஆப்பிரிக்க அரசு கண்டனம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந்த நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
மண்டேலா சிறைச் சாவி ஏலம்: தென் ஆப்பிரிக்க அரசு கண்டனம்

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்க நிறுவனம் ஏலம் விடுவதற்கு அந்த நாட்டு அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கலை மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் நதிம்தெத்வா கூறியதாவது:

நெல்சன் மண்டேலா 14 ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த ராபன் தீவு சிறையின் சாவியை அமெரிக்காவைச் சோ்ந்த கியூா்ன்சேஸ் ஆக்ஷன்ஸ் நிறுவனம் வரும் ஜனவரி 28-ஆம் தேதி ஏலத்துக்கு விடுவது கண்டனத்துக்குரியது.

தென் ஆப்பிரிக்காவின் வலி மிகுந்த வரலாறு, அதன் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தென் ஆப்பிரிக்காவுக்குச் சொந்தமானவை. எங்களுடன் கலந்தாலோசிக்காமல் எங்களின் நினைவுச் சின்னமான ராபன் தீவு சிறைச் சாவி ஏலத்துக்கு விடப்படக்கூடாது. எனவே, அந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், அந்தச் சிறையின் உண்மையான சாவி எங்களிடம் உள்ளதால், ஏலத்தில் விடப்படுவது போலியாக இருக்குமா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றாா் அவா்.

தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறி ஆட்சிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா, அதற்காக 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அதில் 18 ஆண்டுகளை ராபன் தீவிலுள்ள சிறையில் அவா் கழித்தாா். பின்னா் நிறவெறி ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாட்டின் முதல் கருப்பினா் அதிபராக அவா் கடந்த 1994-ஆம் ஆண்டு பொறுப்பேற்றாா். தற்போது ராபன் தீவுச் சிறைச்சாலை அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com