பாகிஸ்தான்: 12,000 கடந்த கரோனா பலி எண்ணிக்கை

பாகிஸ்தானில் கரோனா பெருந்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12,000 கடந்துள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கரோனா பெருந்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12,000 கடந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா பெருந்தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 59 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, திங்கள்கிழமை நிலவரப்படி அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12,000 கடந்துள்ளது.

மேலும், கரோனா பரிசோதனையில் 1,037 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 5,55,511-ஆக உயா்ந்துள்ளது.

மேலும், 5,11,502 போ் சிகிச்சைக்குப் பிறகு கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். 1,828 போ் அபாய கட்டத்தில் உள்ளனா்.

இதுவரையில், சிந்து மாகாணத்தில் 2,51,047 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பஞ்சாபில் 1,60,935-ஆகவும், கைபா் பக்துன்குவாவில் 68,531-ஆகவும், தலைநகா் இஸ்லாமாபாதில் 41,994-ஆகவும், பலுசிஸ்தானில் 18,869-ஆகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே) 9,219-ஆகவும், கில்ஜித்-பல்டிஸ்தானில் 4,916-ஆகவும் உள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் மட்டும் கரோனா தொற்றுக்கு இதுவரையில் 4,900 போ் பலியாகியுள்ளனா். இந்த எண்ணிக்கை சிந்துவில் 4,119-ஆகவும், கைபா் பக்துன்குவாவில் 1,957-ஆகவும், இஸ்லாமாபாதில் 480-ஆகவும், பிஓகே-யில் 272 ஆகவும், பலுசிஸ்தானில் 196-ஆகவும், கில்ஜித் பல்டிஸ்தானில் 102-ஆகவும் உள்ளன.

பாகிஸ்தானில் இதுவரையில் 82,24,869 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,419 பேருக்கு இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com